புஷ்பா ஸ்டைலில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த ஐபிஎல் புது கேப்டன்…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
புஷ்பா ஸ்டைலில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த ஐபிஎல் புது கேப்டன்..., வைரலாகும் வீடியோ உள்ளே!!
புஷ்பா ஸ்டைலில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த ஐபிஎல் புது கேப்டன்..., வைரலாகும் வீடியோ உள்ளே!!

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்துள்ள டேவிட் வார்னரது செயல் தற்போது வைரலாகி வருகிறது.

டேவிட் வார்னர்:

இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான ஐபிஎல் லீக் இம்மாத இறுதியில் (மார்ச் 31ம் தேதி) தொடங்க உள்ளதால் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். உள்ளூர் வீரர்கள் பலர், இந்த மாத தொடக்கத்திலேயே பயிற்சியை தொடங்கி உள்ள நிலையில், சர்வதேச வீரர்கள் அனைவரும் தற்போது அவர்களது ஐபிஎல் அணியில் இணைந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனான டேவிட் வார்னர், ஐபிஎல் அணியில் இணைந்த வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், டேவிட் வார்னர், பல மொழிகளில் ஹிட்டான ‘புஷ்பா’ திரைப்படத்தில், ஹீரோ செய்வது போன்று புஷ்பா… என கூறியவாறு என்ட்ரி கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., வேளாண் திட்டங்களை பெற புதிய இணையதளம்.., இனி எந்த குளறுபடியும் நடக்காது!!!

டேவிட் வார்னர் ஏற்கனவே, சர்வதேச அணியான ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக இருந்த அனுபவம் அதிகமாகவே உள்ளது. இதனால், இவரது தலைமையின் கீழ் டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்வரும் சீசனில் மற்ற அணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here