அவ்வளவு தான்.. கிளோஸ்.. Play Store-லிருந்து பப்ஜி இந்தியா திடீர் நீக்கம்.. சோகத்தில் கேம் பிரியர்கள்!

0
அவ்வளவு தான்.. கிளோஸ்.. Play Store-லிருந்து பப்ஜி இந்தியா திடீர் நீக்கம்.. சோகத்தில் கேம் பிரியர்கள்!

பிளே ஸ்டோரில் இருந்து Battlegrounds Mobile India செயலி திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பப்ஜி இந்தியா நீக்கம்:

உலகில் எல்லா நாடுகளிலும் மொபைல் கேம்ஸுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதில் விடலை பருவத்தினரும் அடக்கம். அதில் சிலர் எல்லை மீறி பெற்றோர்களிடம் கோபப்படுவது, விளையாட அனுமதிக்கவில்லை என்றால் சண்டை போடுவது, அதைவிட ஒருபடி மேலே சென்று கொலை செய்வது போன்ற பெரும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடந்த 2020-ம் ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து சீனா உருவாக்கிய பப்ஜி செயலி நீக்கப்பட்டது.

அதன்பிறகு பப்ஜி செயலியை போன்று Battlegrounds Mobile India என்ற செயலி புழக்கத்துக்கு வந்தது. பப்ஜி பிரியர்கள் தற்போது Battlegrounds Mobile India என்கிற கேம்-க்கு மாறியுள்ளனர். அண்மையில் ஒரு சிறுவன் விளையாட கூடாது என்று தாய் சொன்னதால் அவரை கொலை செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனால் இந்த விளையாட்டையும் தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் Battlegrounds Mobile India செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோரில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தம் 117 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here