வருகிற தீபாவளியை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் ஏராளமான விஜய் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி:
விஜய் தொலைக்காட்சி சில முக்கிய தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை எடுத்து ஒளிபரப்பு செய்வது வழக்கம். அந்த வகையில் வருகிற நவம்பர் 4ம் தேதி வரும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை எடுக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.
இதனால், விஜய் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சி ஷூட்டிங்கில் பங்கெடுக்க படையெடுத்து வந்துள்ளனர். அதில் குறிப்பிடத் தகுந்த வகையில், மைனா நந்தினி-யோகேஷ் தம்பதி, ராஜா ராணி ஆலியா மானசா மற்றும் பாரதி கண்ணம்மா ஹேமா, பாக்கியலட்சுமி ஜெனி உள்ளிட்ட பலர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்