தட்டி தூக்குவாரா ஏ.ஆர்.ரகுமான்.. கிராமி விருதுக்கு மீண்டும் பரிந்துரை – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

இசை உலகில் தனி சாம்ராஜ்யத்தையே அமைத்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் பாடல்கள் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரையில் ரகுமான் பாடல்:

தமிழ் திரை உலகத்தில் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வாங்கி மிகப்பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துள்ளவர் ஏ.ஆர் ரகுமான்.  பல முன்னணி படங்களுக்கும், முன்னணி நாயகர்களின் பாடலுக்கும் இசையமைத்துள்ள இவர் இசை உலகத்தில் தனி சாம்ராஜ்யத்தையே நிகழ்த்தியுள்ளார்.

இவர் ஏற்கனவே, கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக  2 கிராமி விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது இவர் இசையமைப்பில் உருவான மிமி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் 64-வது கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here