உலக கோப்பையில் சதம் விளாசிய சீனியர் வீரர்…, குறைந்த இன்னிங்ஸில் படைத்த சாதனை விவரம் உள்ளே!!

0
உலக கோப்பையில் சதம் விளாசிய சீனியர் வீரர்..., குறைந்த இன்னிங்ஸில் படைத்த சாதனை விவரம் உள்ளே!!
உலக கோப்பையில் சதம் விளாசிய சீனியர் வீரர்..., குறைந்த இன்னிங்ஸில் படைத்த சாதனை விவரம் உள்ளே!!

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இன்று (அக்டோபர் 10) பங்களாதேஷ் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி, மோதி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜானி பேர்ஸ்டோவ் 52 ரன்கள் எடுத்து வெளியேற டேவிட் மாலனுடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த இரு வீரர்களும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை அதிரடியாக நாலாபுறமும் சிதறடித்து வந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இவர்களில், 36 வயதான டேவிட் மாலன் 107 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உட்பட 140 ரன்கள் விளாசி அசத்தி உள்ளார். ஒருநாள் தொடரை பொறுத்த வரையில், 23 இன்னிங்ஸில் விளையாடிய இவர் இந்தியாவில் தனது 6 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலகக் கோப்பையில் சதம் அடித்த அதிக வயதான இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை டேவிட் மலான் பெற்றார்.

உலக கோப்பையின் முதல் வெற்றிக்காக இந்திய அணிக்கு சிறப்பு ஏற்பாடு…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here