IPL 2023: ஐபிஎல் தொடரை இழக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்?? உறுதிப்படுத்திய டேவிட் மில்லர்!!

0
IPL 2023: ஐபிஎல் தொடரை இழக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்?? உறுதிப்படுத்திய டேவிட் மில்லர்!!
IPL 2023: ஐபிஎல் தொடரை இழக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்?? உறுதிப்படுத்திய டேவிட் மில்லர்!!

ஐபிஎல் தொடருக்கான முதல் சில போட்டிகளை தென் ஆப்பிரிக்க வீரர்கள் இழக்க இருப்பதை டேவிட் மில்லர் உறுதிப்படுத்தி உள்ளார்.

டேவிட் மில்லர்

அக்டோபர் மாதம் இந்தியாவில் சர்வதேச அணிகளுக்கு இடையே ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கு சர்வதேச அணிகள் அனைத்தும் தயாராகும் வகையில், அந்தந்த நாட்டு அணி நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகின்றனர். தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியானது மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை ஒருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதனால், மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள, ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை மேற்கண்ட கண்ட அணிகள் இழக்க நேரிடும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரரான டேவிட் மில்லர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட் – இயற்கை விவசாயத்திற்கு ஜாக்பாட் திட்டம்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஐபிஎல்லில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள இவர் கூறியதாவது, சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியை இழக்க இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், எங்களுக்கு முக்கிய தொடராக உள்ளது. ஐபிஎல்லில் ஒரு சில ஆட்டங்களை இழந்தாலும், விரைவில் அணியில் இணைவோம் என்று டேவிட் மில்லர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here