தமிழக வேளாண் பட்ஜெட் – இயற்கை விவசாயத்திற்கு ஜாக்பாட் திட்டம்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

0
தமிழக வேளாண் பட்ஜெட் - இயற்கை விவசாயத்திற்கு ஜாக்பாட் திட்டம்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழக வேளாண் பட்ஜெட் - இயற்கை விவசாயத்திற்கு ஜாக்பாட் திட்டம்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வேளாண்மை வளர்ச்சிக்கான பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) காலை 10 மணி அளவில் அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இயற்கை விவசாயங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் அறிவித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி சிறு குறு விவசாயிகளை தொடர்ந்து நிலமில்லாத தினக்கூலி விவசாயிகளுக்கும் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர்களின் வேலை பளுவை குறைக்கும் விதமாக பயன்படும் வேளாண் கருவிகளின் தொகுப்புக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் பயனடையலாம். அதேபோல் தொழில்நுட்பம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வேளாண் தகவல்களை விவசாயிகள் பகிர்ந்து கொள்ள ஏதுவாக வட்டார அளவிலான கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.

திரையரங்களில் வசூலில் வெளுத்து வாங்கிய ஷாருக்கானின் ”பதான்”..,இனி அமேசான் ott தளத்தில்!!

இதைத்தொடர்ந்து சுய தொழில்களை தொடங்க முன்வரும் அக்ரிகல்சர் பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக சுமார் 200 தேர்ந்தெடுத்து ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும் மனிதனின் உடல் நலத்தையும், மண்ணின் வளத்தையும் மேம்படுத்தும் இயற்கை விவசாயத்த வளப்படுத்த மாநிலம் முழுவதும் 14,500 ஹெக்டேரில் 750 தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் விவசாயிக்கு நம்மாழ்வார் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இதற்காக ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்படி இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நலத்திட்டங்களால் தமிழக அரசுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here