பள்ளிகளில் வகைவகையான உணவுகள் – ஆந்திர முதல்வரின் அசத்தலான திட்டம்!!

0
பள்ளிகளில் வகைவகையான உணவுகள் !

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்த புதுப்புது திட்டங்களை அறிவுத்துள்ளார். அவரின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிகின்றன.

அன்று – இன்று திட்டம்

ஆந்திர முதல்வர் ‘தாய்மடி’ திட்டத்தை இன்று சித்தூரில் அறிவித்து பேசியதாவது, புதிதாக “அன்று-இன்று” என்ற திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 15,715 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்படுகின்றன. பின்பு இது 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதன் பள்ளிகளின் கழிவறை, நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுச்சுவர், கட்டடங்கள், பெயிண்டிங் மற்றும் தூய குடிநீர் போன்றவை சீரமைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படவுள்ளது.

புதிய ஸ்கூல் கிட்

ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளியின் புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் புத்தகம், ஸ்கூல் பெல்ட், 3 செட் சீருடை மற்றும் புத்தகப்பை ஆகியவற்றுடன் கூடிய ‘ஸ்கூல் கிட்’ வழங்கப்படவுள்ளது.

தெலுங்கு மொழி கட்டாயம்

ஆந்திர அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டு தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்படவுள்ளது. மேலும் இது அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

விதவிதமான உணவுகள்

பள்ளி மாணவர்கள் தினமும் ஒரே வகையான உணவுகளை உண்ணாமல் இனி தினமும் விதவிதமான உணவுகள் வழங்கப்பட உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை – பருப்பு சாதம், புளியோதரை, வெஜிடபிள் சாதம், கிச்சிடி, கீரை சாதம், சாம்பார் சாதம், இனிப்பு, வேக வைத்த முட்டை, கடலை மிட்டாய்
சனிக்கிழமைகளில் – சாம்பார் சாதமும், கூட்டும்
வழங்கப்படவுள்ளது.
சங்கராந்தி விடுமுறை முடிந்த பிறகு இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here