தன்னுடைய பெயரை கெடுக்க திட்டம் போட்ட டி.இமான் – புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி!!

0
தன்னுடைய பெயரை கெடுக்க திட்டம் போட்ட டி.இமான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி!!
தன்னுடைய பெயரை கெடுக்க திட்டம் போட்ட டி.இமான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி!!

பிரபல இசையமைப்பாளர் டி இமான், தனது பெயரை கெடுக்க அவதூறு வழக்கு தொடுத்திருப்பதாகவும், தனது பெயரை கெடுக்க இப்படி செய்வதாகவும் அவரது முன்னாள் மனைவி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மனைவி விளக்கம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் இசையமைப்பாளர் டி இமான். தனது முதல் மனைவி மோனிகாவை பிரிந்த இவர் அண்மையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தன் முன்னாள் மனைவி தன்னுடைய குழந்தைகளை சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுகுறித்து, மோனிகா புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, குழந்தைகள் பாஸ்போர்ட்டை இமானிடம் கேட்டபோது அவர் தொலைந்து விட்டது என கூறியதால் தான், புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்ததாகவும், சட்டப்படி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த தன் மீது அவதூறாக புகார் சொல்வதாகவும் மோனிகா தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது பெயரை கெடுக்க பொய்யான வழக்கு போட்ட இமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here