நவம்பர் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா??? மோடியின் அறிவிப்பால் மக்கள் குழப்பம்!!!

0

கொரோனா தொற்று  காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கானது அமலில் உள்ளது.  இதற்கிடையில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி வரை  அதாவது நவம்பர் 4 வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் ஊரடங்கு நவம்பர் மாதம் வரை தொடருமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவின் முதல் அலை இந்தியாவை பாதித்ததை விட  இரண்டாவது அலை நாட்டில்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு நிலை மற்றும் வாழ்வாதாரத்தை இந்த இந்த அலை கடும் மோசமாக தாக்கியது. இருப்பினும் எந்த வித சலுகைகளும் முதல் அலை போன்று அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக இ.எம்.ஐ எனப்படும் மாத தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற எந்த சலுகைகளும் இந்த அலையில் இல்லை.

இதையடுத்து மக்களிடம் நேற்று உரை நிகழ்த்திய பிரதமர் மோடி அவர்கள், தீபாவளி வரை நாட்டு மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பால்  மக்கள் மத்தியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் வரை தொடருமோ என்ற கேள்வி வலுத்து உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here