விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது நடக்கவிருக்கும் ஐபிஎல் – இர்பான் பதான் கருத்து..!

0
Irfan Pathan
Irfan Pathan

கொரோன தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. இதற்கு முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று:

Irfan Pathan
Irfan Pathan

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

உலக நாடுகளில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவியதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்து இருந்தது பிசிசிஐ. ஆனால் போட்டிகள் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு கடுமையான இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் நோய் பரவலும் இருக்காது மேலும் இழப்பும் இருக்காது என்று பிசிசிஐ கருதியது.

இர்பான் கருத்து:

Irfan Pathan
Irfan Pathan

இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது “விருந்தினர்கள் இல்லாமல் ஒரு திருமணம் முழுமையாகாது. ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால், நமக்கே அதே உணர்வு ஏற்படும். ஆனால், திருமணம் விருந்தினர்கள் இல்லாமலும் நடக்கலாம். நீதிமன்ற திருமணங்கள் போன்ற வாய்ப்புகள் உள்ளன. இறுதியில் திருமணங்கள் நடக்கும். அது போன்றுதான் ஐபிஎல் இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here