இ-பாஸ் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அனுமதி கிடையாது – மாநில அரசு உத்தரவு..!

0
புதுச்சேரியில் 24 மணிநேரமும் கடை இயங்கும்.., அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
புதுச்சேரியில் 24 மணிநேரமும் கடை இயங்கும்.., அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் இ-பாஸ் வைத்திருந்தாலும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் நபர்கள் இ-பாஸ் இன்றி வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலி இ-பாஸ் மூலம் பயணித்த பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் வரும் ஜூன் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் வேலைக்குச் சென்ற பலர் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Narayanasamy V
Narayanasamy V

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் நபர்கள் இ-பாஸ் வைத்து இருந்தாலும் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அம்மாநில முதல்வர் அறிவித்து உள்ளார். சென்னையில் இருந்து வந்து புதுச்சேரிக்குள் நுழைந்தாலும் அவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடலூர், விழுப்புரத்தில் இருந்து வரும் நபர்கள் மருத்துவ தேவையாக இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர் என முதல்வர் அறிவித்து உள்ளார்.  மேலும் முகக்கவசம் இன்றி வெளியே செல்லும் நபர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் எச்சரித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here