காற்றில் பறக்கவிடப்பட்ட பிரதமரின் இலவச தடுப்பூசி வாக்குறுதி – கோவிஷீல்டு விலை ரூ.400 ஆக அதிகரிப்பு!!

0

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி வந்த நிலையில் தற்போது சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை ரூ.400 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி விலை:

நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நாட்டில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் சீரம் நிறுவனம் தனக்கு சொந்தமான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250 மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் விலையை சீரம் நிறுவனம் ரூ.400 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

இதனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.600 வழங்கப்படும் நிலை ஏற்படும். உலக நாடுகளில் அமெரிக்கா ரூ.1,500, ரஷ்யா மற்றும் சீனா தலா ரூ.750க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. இதனை சுட்டிக்காட்டிய சீரம் நிறுவனம் தற்போது இதன் விலையை அதிகரித்துள்ளனர். மேலும் தடுப்பூசி உற்பத்தியில் 50% மட்டுமே மாநில அரசுகளுக்கு நேரடியாக விற்கப்படும் என்றும் மத்திய அரசுக்கு மீதமுள்ள 50% வழங்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூறிய இலவச தடுப்பூசி வாக்குறுதி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here