‘பார்க்க சாண்டா மாதிரி இருந்துகிட்டு பேசுறதெல்லாம் பாண்டா மாதிரி’ – மோடியை பகிரங்கமாக கலாய்த்த சித்தார்த்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக திகழும் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவரின் இந்த தைரியத்தை பார்த்து வியந்து வருகின்றனர்.

சித்தார்த் ட்வீட்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். தமிழில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது வரை தொடர்ந்து பல ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். படங்களில் மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட. இவரது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை எடுத்துரைத்திருப்பார். மேலும் ஆளும் காட்சியையும் சரமாரியாக பேசி தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது கூட இந்த கொரோனா பரவல் காரணமாக மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்படி இருக்க மோடி மத சார்பு கூட்டம் என்று பலரையும் ஒன்று கூட்டி வருகிறார். இதற்கும் சித்தார்த் ட்விட்டரில் இதனை கண்டித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மோடி கடைசியாக பேசிய வீடியோவில் பார்க்க சாண்டா போலவே இருப்பதாக பலரும் கிண்டலடித்து வந்தனர். இதற்கு சித்தார்த் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது ‘பார்க்க சான்டா மாதிரி இருந்துகிட்டு பாண்டா மாதிரி பேசுறது’ என்று பகிரங்கமாக கூறியுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here