தமிழகத்தில் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்.!

1

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வரும் காரணத்தால் முன்னெச்சரிக்கை கொண்டிருக்கின்றன. அதையடுத்து கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட வில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா

கொரோனா வைரஸ் தற்போது கோவையிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த கோவை மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை முன்பு மாநகராட்சி சார்பாக பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..!

இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கொரோனா வார்டு மற்றும் அரசு மருத்துவமனையையும் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாகவும், கோவையில் முழுமையாக சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – எல்லைகளுக்கு சீல் வைப்பு..!

மேலும் தமிழ்நாடு – கேரளா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே அனுமதிப்படுகிறது. எல்லைகளில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. மார்ச் 31 வரை மக்கள் ஒரே இடத்தில் கூட கூடாது எனவும் கோவையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் நலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கோவையில் கட்டாய ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை இல்லை எனவும் ராஜாமணி தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here