உஷார் மக்களே.., கொரோனாவால் 6,877,544 பேர் இறப்பு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
உஷார் மக்களே.., கொரோனாவால் 6,877,544 பேர் இறப்பு - சுகாதாரத்துறை அறிவிப்பு!!
உஷார் மக்களே.., கொரோனாவால் 6,877,544 பேர் இறப்பு - சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பிடியில் இருந்து நீங்க முடியாமல் அவதிப்பட்டனர். அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினர். ஆனால் அதை முழுவதுமாக அழிக்க இன்னும் எந்த நாட்டிலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது உலகத்தில் உள்ள சில நாடுகளில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்குமோ என்று மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவின் பரவலை தடுக்க அரசாங்கம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார துறை ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் 688,743,190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 661,106,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்த வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி., தீராத சர்ச்சை., முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!!

மேலும் 38,551 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 6,877,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இதனால் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.77 லட்சத்தை தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here