தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா???? – இன்று வெளியாகும் அறிவிப்பு!!!

0

மாநிலத்தில் COVID – 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முழு ஊரடங்கு  ஜூன் 7 காலைக்கு பிறகு  நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதை குறித்து தமிழக அரசு இன்று அறிவிக்கும். மேலும் பாதிப்புகள் குறைந்த மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா:

கடந்த ஜூன் 4 ம் தேதி முதல்வர் எம்.கே.ஸ்டாலினுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஒரு உயர்மட்ட சந்திப்புக்குப் பிறகு, அரசாங்கம் COVID-19 முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தொற்று குறைந்து வரும் ஒரு சில மாவட்டங்களில் தளர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விவாதித்தனர்.

 

முன்னதாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 36,000 வழக்குககள் பதிவில் இருந்து, ஜூன் 3 அன்று இந்த எண்ணிக்கை 24,405 வழக்குகளாகக் குறைந்தது. இருப்பினும், கோவை, சென்னை, திருச்சி, ஈரோட், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.

வெள்ளிக்கிழமை நிலைமை குறித்து விவாதிக்க அதிகாரிகள் கூட்டத்திற்கு  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த முடிவு சனிக்கிழமை முறையாக அறிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here