ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு!!!

0

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தடுப்பூசி ஒரு நல்ல  தீர்வாக உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க புனேவை தலைமையிடமாக கொண்டு உள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ என்ற இந்தியா நிறுவனம் ரஷ்யாவின் தொற்று நோய்வியல் மற்றும் நுண் உயிரியல் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து தடுப்பூசியை தயாரிக்க விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் மட்டுமே தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை தயாரிக்க சீரம் அனுமதி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியானது அட்டாஸ்ஃபர் மையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here