இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!

0
Harsh_Vardhan
Harsh_Vardhan

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமூக பரவல் இல்லை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதுவரை இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,129 பேர் உயிரிழந்த நிலையில், 4,76,378 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 24,000 பேர் என்ற கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ல் வெளியீடு??

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறினர் என்றார். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் பாதிப்பு அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சில இடங்கள் இருக்கலாம் ஆனால் நாடு முழுவதும் சமூக பரவல் இல்லை என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் 3வது நாடாக இந்தியா இருக்கிறதை நாம் காண்கிறோம் . ஆனால் அதை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம் உலகின் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஒரு மில்லியனுக்கு பாதிப்பு 538, உலக சராசரி 1,453 பாதிப்பு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here