மே 20 முதல் தமிழகத்தில் 18-44 வயதினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் !!!

0

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்த நிலையில் மே 20 இல் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு தடுப்பூசி அறிவிப்பு :

நாடு முழுவதும் மக்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழக அரசு தடுப்பூசி வழங்குவது குறித்து தீவிரம் காட்டி வருகிறது. முதற்கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கி வந்த நிலையில் நாளை முதல் 18 -44 வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை மையத்திலிருந்து 9 லட்சம் அளவு தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கூறுகையில் ‘தடுப்பூசி முதலில் 18-44 வயதினருக்கு வழங்கப்படும் எனவும் அதன்பின் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்படும்’ என கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here