‘நானும் இப்போ லவ் எல்லாம் பண்றேன்’ – உண்மையை போட்டு உடைத்த ‘பூவே உனக்காக’ சீரியல் நடிகை!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலின் நடிகை ராதிகா அசத்தலாக ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக ராதிகா

பூவே உனக்காக சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பூவராசியின் அம்மா ரத்தினவல்லி இறந்ததற்கு பிறகு வீடே வெறிச்சோடி போகிறது. பூவரசிக்கும் தன் அப்பா கிடைத்து விடுகிறார். ஆனால் ரத்னவள்ளி இறக்கும்போது ஒரு லெட்டரில் தன் மாப்பிள்ளை ஜெயிக்க வேண்டும் என்று கூறியதால் ரத்னவள்ளியின் கணவர் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார். ஆனாலும் பூவரசி ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் உள்ளார். கதிர் இப்பொழுதாவது திருத்துவார் என்று பார்த்தால் நாளுக்கு நாள் அவரது எண்ணங்கள் அனைத்தும் மோசமாகி வருகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு கீர்த்தி மீண்டும் வீட்டிற்கு வருவது தான்.

இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பூவரசியாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ராதிகா. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீலிஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொல்லாதவன் படத்தில் தனுஷ் சொல்லும் டயலாக் ஆன நான் கூட இப்போ ‘லவ் எல்லாம் பண்றேன்’ என்ற சீனுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here