வயிற்றில் பாலை வார்த்த காவல் துறை – இ-பதிவு தேவையில்லை, இனி அடையாள அட்டை போதும்!!!

0

மருத்துவர்கள், ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், சுகாதார துறையினர்,  மத்திய அல்லது மாநில அரசு பணியாளர்கள், தலைமை செயலக அலுவலகர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் பயணம் செயும்போது இ-பதிவு தேவையில்லை, அடையாள அட்டை காண்பித்தால் போதும் என சென்னை காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

சென்னையில் இ-பதிவு முறையில் தளர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யும்போது இ பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. திருமணம், இறப்பு ஆகியவற்றிற்காக பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இப்போது இந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு பத்திரிகையாளர் மன்றம், பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதி தர தமிழக முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கும் இ-பதிவு தேவையில்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது. இவ்வாறு அனுமதிப்பட்ட துறையை சேர்ந்தவர்களை  போலீசார் வழிமறித்தால் இந்த எண்களில் 23452320 மற்றும் 9498130011 தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி மருத்துவர்கள், சுகாதார துறையினர், ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்றோருக்கு இ-பதிவு கட்டாயமில்லை என தெரிவித்து மேலும் இவர்கள் பயணம் செய்யும் போது தங்கள் அடையாள அட்டையை காண்பிக்கலாம் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here