அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் – நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!

0
அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் - நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!
அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் - நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!

நாட்டில் அடுத்த ஆண்டு முழுவதும் மக்கள் முகவசத்தோடு இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

முக்கிய பேச்சு:

நாடு முழுவதும் கடந்த 2019 ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். உயிரிழப்பை தடுக்க அரசால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பல மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி ஒன்று மட்டுமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்தி வருகிறது.

அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் - நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!
அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் – நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!

இந்த நிலையில், கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, நாட்டில் தொடர்ந்து பண்டிகைகள் வந்த வண்ணம் இருப்பதால் அடுத்த ஆண்டு முழுவதும் மக்கள் முகக்கவசத்தோடு இருப்பது அவசியம் என அறிவுறுத்தினார். இது மட்டுமில்லாமல், கொரோனாவின் மூன்றாம் அலை வராது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் - நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!
அடுத்த ஆண்டு முழுவதும் முகக்கவசத்தோடு இருங்கள் – நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் பேச்சு!!

கொரோனா மேலும் பரவாமல் இருக்க பலன் தர வேண்டிய மருந்துகளின் தேவையை அதிகப்படுத்த வேண்டும் எனவும், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தி சமூக நோய் தடுப்புத் திறனை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மூன்றாம் அலை வருமோ? வராதா? என்ற கேள்வியில் மக்கள் விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் நிதி ஆயோக் தலைவரின் பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here