ஒரு டன் உலோக கழிவு பொருட்களால் பிரதமரின் உருவச்சிலை – ஆந்திராவில் அசத்தல்!!

0

ஆந்திர மாநிலத்தில் வீணான ஒரு டன் உலோக கழிவுகளை வைத்து பிரதமர் நரேந்திர மோடியின் சிலையை உருவாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உலோக சிலை:

நமக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டியின்  ஆட்சி நடந்து வருகிறது.  இந்த மாநிலத்தில் உள்ள இரண்டு சிலை வடிக்கும் தொழிலார்கள் முக்கிய சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.  அதாவது, குண்டூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் வெங்கடேஷ்வர ராவ், அவரது மகன் ரவி ஆகியோர் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர்.


இதில் குறிப்பிடத் தகுந்த வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இருந்து வீசப்பட்ட பயன்படாத உலோகங்களை கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்கு சேகரித்து உள்ளனர். இதை கொண்டு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 14 அடி உயர சிலையை வடிவமைத்துள்ளனர்.  இந்த சிலை தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும், இந்த சிலையை செய்ய பத்து பேர் தேவை பட்டதாகவும், இதோடு சேர்த்து சுமார் 600 மணி நேரத்தில் பிரதமரின் இந்த சிலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் பிரதமருக்கு கோவில் கட்டப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   தற்போது இந்த கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here