கொரோனாவுக்கான சிகிச்சை கடினமானது ஏன்? விளக்கும் ஆய்வு முடிவுகள்!!

0

உலகமெங்கிலும் கொடிய வைரஸாக அறியப்படும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் வல்லரசு நாடுகள் கூட பின்தங்கி இருப்பதற்கான காரணம் தற்போது ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத அளவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஜனவரி மாதம் முதலே பல நாடுகளுக்கு பரவ துவங்கியது. நோய் உருவானதற்கான காரணத்தை அறிய உடனடியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒரு பக்கம் இந்த உயிர்கொல்லி நோயினால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிய, மறு பக்கம் இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் வேகெமெடுத்தன.

கொரோனா பாதித்தவரிடம் இருந்து 6 அடி தூரத்தில் கொரோனா பரவும்?

ஒரு வழியாக தொற்று பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய திறனுள்ள தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்ட போது, இந்த வைரஸ் பல உலக நாடுகளை மரணத்தில் அமிழ்த்திக்கொண்டிருந்தது. இன்று வரை கொரோனாவுக்கான முழுமையான மருந்து கண்டுபிடிக்காத வரையிலும் ஏதோவொரு வகையில் மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

ஸ்பானிஷ் புளூ

கொரோனாவை போல, மற்ற அனைவராலும் அறியப்பட்ட பிரிதொரு நோய் தான் இந்த ஸ்பானிஷ் புளூ. கடந்த 19 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த இந்த ஸ்பானிஷ் புளூவை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது ஸ்பெயின் நாடு தான். இந்த வைரஸ் தொற்றின் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என வரலாறு கூறுகிறது.

சார்ஸ் வைரஸ்

கொரோனா வைரஸை போல சுவாச பாதைகளில் சேதத்தை ஏற்படுத்தி மனிதர்களை கொல்லும் ஒரு கொடிய வைரஸ் தான் இந்த சார்ஸ் வைரஸ் தொற்று. இந்த வைரஸும் பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது.

கொரோனா வைரஸ்

இந்த கொரோனா வைரஸ், முந்தய வைரஸ் வகைகளை போல அல்லாது சில தனித்துவமான பண்புகளை பெற்றுள்ளது. இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதே தெரியாத அளவுக்கு ரகசியமாக உள்ளிருந்து செயல்படுகிறது. பொதுவாக ஒரு வைரஸ் பாதிப்பால், ஒருவருக்கு சளி ஏற்படும் போது சுவாச பாதையின் கீழ் பகுதியில் அந்த வைரஸ் அமர்ந்து கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இந்த கொரோனா வைரஸ் சுவாச பாதையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இருந்து கொண்டு உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவரது நுரையீரலானது நேரடியாக பாதிக்கப்பட்டு மரணம் வரை கொண்டு சேர்க்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் மூலம் பல உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதை கட்டுப்படுத்துவது உலக விஞ்ஞானத்துக்கே ஒரு சவாலாக தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here