இந்தியாவில் கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 43,263 பேர் பாதிப்பு.. 338 பேர் இறப்பு!!

0

இந்தியாவில் ஒரே நாளில் 43,263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 338 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40,567 பேர் இக்கொடிய தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

சீனாவில் 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இன்னும் முடிவுக்கு வராமல் அடுத்தடுத்து அலையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தற்போது உலகம் முழுவதும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 338 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,719 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் இந்நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 40,567 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தற்போது வரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,23,04,618 ஆக அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here