தலைநகரில் குறையும் கொரோனா பாதிப்பு.. முதல் முறையாக 1000க்கும் குறைவாக பதிவான தொற்று எண்ணிக்கை!!!!

0

தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 900 பேர் புதிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் தினசரி எண்ணிக்கை 1,000 ஐ விடக் குறைவாக பதிவாவது இதுவே முதல் முறை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை புரட்டிப் போட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமே மிகத் தீவிரமாக இரண்டாவது அலையின் பாதிப்பு இருந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் இந்திய சுகாதாரத்துறை கட்டமைப்பையே சிதைத்து எடுத்துவிட்டது இந்த கொரோனா இரண்டாவது அலை. தற்போது, தான் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் சுமார் 24 மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்துள்ளது. தற்போது டெல்லியிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை  1000க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, “தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தபடும் மேலும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்லும்” என  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here