‘சர்ச்சைகளுக்கு மத்தியில் விருதை பெற விருப்பமில்லை’ – ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தர வைரமுத்து முடிவு!!

0

கேரளாவின் உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு இடையில் விருது பெற விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

விருது பெற விரும்பவில்லை:

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு மயங்காத ஆட்களே இல்லை என கூறலாம். அவரது பாடல் வரிகள் மட்டுமல்லாது அவர் பேசும் தமிழ் நடையும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. 90ஸ் களின் பிடித்தமான பாடல்களில் இவரது வரிகள் முக்கிய பங்காற்றும். ஓஎன்வி இலக்கிய விருது கேரளா மாநிலத்தின் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டு இந்த விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதில் ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமும் தரப்படும்.


வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர். வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது போன்ற சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வண்ணமாக கவிஞர் வைரமுத்து அவர் தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்ச்சைகளுக்கு இடையில் விருது பெற விரும்பவில்லை எனவும் விருதினை திருப்பி தருவது மட்டுமல்லாமல் பரிசு தொகை 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து 5 லட்சமாக கேரளா முதல்வர் நிவாரண நிதியாக தருவதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here