இனி ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் – அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
இனி ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் - அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

உலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த வைரசால் கிட்டத்தட்ட பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர், பல லட்சம் பேர் உயிர் இழந்தனர். இதனை தடுப்பதற்கு எல்லா நாடுகளும் தனிப்பிரிவு வைத்து நோய் தடுப்பு முறையை கையாண்டு வருகிறது. மேலும் இந்நோயால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமின்றி கொரோனா உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாக மக்களிடம் பரவி வந்தது. அதற்கு ஏற்ப தடுப்பூசிகளை அரசாங்கம் புதுப்பித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த வித தடுப்பூசியும் புதுப்பிக்க படவில்லை. தற்போது முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை தொடங்குகிறோம்.

சமையல் போட்டியில் ஜெயிச்சு காட்டிய பாக்கியா.., இனிமேல் தான் கோபிக்கு இருக்கு.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த தடுப்பூசி 12 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயம் ஆண்டுதோறும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் மே மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த தடுப்பூசி முற்றிலும் இலவசமானது மற்றும் பாதுகாப்பானது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here