குக் வித் கோமாளி 2 இல் யார் கலந்துக்கப் போறாங்கனு தெரியுமா?? பட்டையை கிளப்பிய ப்ரோமோ!!

1
ப்பா., வேற லெவல்! பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் - குவியும் வாழ்த்து!!

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சேனலில் விஜய் டிவியும் ஒன்று. மக்கள் பலரும் ஆவலுடன் கண்டுகளிக்கும் விதமாக விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளியும் ஒன்று. இந்நிலையில் தற்போது பார்ட் 2 வரவுள்ளது. அதற்கான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பானது. ஆரம்ப காலகட்டத்திலேயே மக்களுக்கு பிடித்தும் போனது. மேலும் இதில் ரம்யா பாண்டியன், வனிதா, ஷிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி அந்த அளவிற்கு புகழ் பெறவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நாளடைவில் இந்த நிகழ்ச்சியை பார்க்கத்தவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வைரல் ஆனது. மேலும் புகழ், பாலா காமெடி வேற லெவலில் இருந்தது. வனிதாவும் சமையலில் இருந்த ஆர்வத்தை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். மேலும் உமா ரியாஸ், ரேகா, பிரியங்கா ரோபோ ஷங்கர் என பலரும் சமையலில் கலக்கி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலமே ரம்யா பாண்டியனுக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அவருக்கு மட்டுமல்ல புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என பலரும் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். புகழுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது. குக் வித் கோமாளி மூலமே ரம்யாவிற்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது.

மேலும் இது குக் ஷோ மட்டுமல்ல ஒரு காமெடி ஷோவாகவும் இருந்தது. இவ்வாறு பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்த குக் வித் கோமாளி முடிவடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்த சீசன் எப்பொழுது என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் கொரோனாவால் அனைத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பாலா, ஷிவாங்கி, புகழ், மணிமேகலை களமிறங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சி நவம்பர் 14 முதல் தொடங்கவுள்ளது. வழக்கம் போல சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here