
இந்தியாவில் உலகப்புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுள் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. தென்னாட்டின் காசி என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தரிசனத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரயில் பயணங்களையே மேற்கொண்டு வருகிறார்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால், ராமேஸ்வர ரயில் நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் உள்ளூர் வாசி முதல் வெளிநாட்டவர் வரை மறுசீரமைப்பு கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.90.2 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி காத்திருப்போர் கூடம், மின் தூக்கி, பார்க்கிங் வசதி, ஓய்வறை உட்பட பல்வேறு மாற்றங்கள் இன்னும் ஒன்றரை வருடத்திற்குள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்ட பணிகளை மேற்கொள்ள கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.