சின்னத்திரையை கலங்கடித்த பிரபலத்தின் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!!

0

கொரோனா அலை நாட்டையே பாதித்து பல மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ,சுற்றத்தார் என பலரை பறிகொடுத்து மீளா துயரத்தில் உள்ளனர். சமீபகாலமாக திரைத்துறையில் எதிர்பாராத வகையில் பல பிரபலங்கள் உயிர்  இழந்து உள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு திரை பிரபலம், கலைமாமணி அமர சிகாமணி மரணமடைந்து உள்ளார்.

 

அந்த வகையில், வெள்ளித்திரையில் விவேக், இயக்குனர் கே.வி.ஆனந்த் போன்ற முக்கிய பிரபலங்கள் உட்பட நகைச்சுவை நடிகர்களான மாறன், நெல்லை சிவா, பவுன்ராஜ், பாண்டு, இயக்குனர் தாமிரா போன்றோர்கள் மண்ணை விட்டு சென்று உள்ளனர்.மேலும் சின்னத்திரையை பொறுத்தவரை விஜய் டிவியின் சீரியல்களில் நடித்த   தேன்மொழி நடிகர் குட்டி ரமேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கடேஷ், சரவணன் மீனாட்சி வேணு கோபால கிருஷ்ணன் போன்றோர் மரணம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் சீரியல்கள் மற்றும் பல படங்களில் நடித்து உள்ள நடிகர் அமர சிகாமணி, தற்போது காலமாகி உள்ளார். இவரின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்  வெளியாகவில்லை.இந்த தகவல் அறிந்த திரை துறையினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர்.நடிகர் அமர சிகாமணி கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here