கொரோனாவால் இயக்குனர் ஷங்கர் தன் மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு – என்ன கொடுமை சார் இது??

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் ஷங்கர். இவர் தனது மகளின் திருமணத்தை மிக எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர்:

தமிழ் சினிமாவில் இந்தியன், நண்பன், எந்திரன், 2.0 என்று பல பிரமாண்டங்களை படைத்தவர் தான் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் நடிப்பதே அனைத்து நடிகர் நடிகைகளின் மிக பெரிய கனவாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இவர் ரசிகர்களை மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளையும் தனது படைப்புகள் மூலம் கவர்ந்துள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவரது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை யார் தெரியுமா? மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளரின் மகன் தான் மாப்பிள்ளையும்.

தற்போது தமிழகத்தில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக ஷங்கர் தனது மகளின் திருமணத்தை சிம்பிளாக நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கரின் மகள் திருமணம் இந்த வாரம் பொள்ளாச்சியில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய இயக்குனரின் மகள் திருமணம் சிம்பிளாக நடைபெறவுள்ளதை தெரிந்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here