கிடு கிடுவென உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி!!!

0

அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இது ஒரு பக்கமிருக்க இன்னொருபுறம், பொருளாதார பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு யூனிட் 5000- லிருந்து ரூ.6,000 முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் 3,600 ரூபாயில் இருந்து 4,100 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 3,400 ரூபாயில் இருந்து 3,900 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கட்டுமான கம்பி ஒரு டன் 68,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாகவும், செங்கல் ஒரு லோடு 18,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை மிகவும் அதிகரித்திருப்பது கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here