மாஸ்ஸாக வெளியான ‘மாநாடு’ படத்தில் ‘First Single’ அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தில் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

மாநாடு அப்டேட்

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவரது பெரிய சொத்து இவரது ரசிகர்கள் தான். மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை திரைப்படம் ஏதும் வெளிவராமல் இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் இருக்கும். ஆன்மிகம் பக்கம் தனது வாழ்க்கை பாதையை அமைத்துக்கொண்ட இவர் தற்போது ரசிகர்களுக்காக மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார்.

உடல் எடை கூடிய இவரை கலாய்த்த அனைவருக்கும் பதில் கூறுவது போல தனது உடல் எடையை குறைத்து பிட் ஆகி ஈஸ்வரன் திரைப்படத்தில் கம் பேக் கொடுத்துள்ளார். அடுத்ததாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் STR நடிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் இதில் யுவன் கூட்டணி வேறு இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் பாடல் மாஷா அல்லாஹ் வரும் ஜூன் 21 தேதி வெளியாகும் என ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here