மன்மோகன் சிங்க் திடீர் உடல்நலக்குறைவு – நலமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..!

0

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர்:

2004 முதல் 2014ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்க். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் அவர் உட்கொண்ட மருந்து அவருக்கு சேராத காரணத்தால் இது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here