மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த காமெடி நடிகர் சூரி –  மனதார வாழ்த்தும் மதுரை வாசிகள்!!

0
நான் படிக்காதவன்.. பட விழாவில் எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி - அவரே அளித்த விளக்கம்!
நான் படிக்காதவன்.. பட விழாவில் எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி - அவரே அளித்த விளக்கம்!

நடிகர் சூரி சமீபத்தில், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முன் திறந்த அம்மன் உணவகத்தின் செயல்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் பாராட்டு:

தமிழ் சினிமாவில் காமெடி, புயலாக வலம் வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு, படத்தில் பரோட்டா சூரியாக  அறிமுகமான இவர்  தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில், நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது இயக்குனர் வெற்றிமாறன்  இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அண்மையில் இவர் மதுரையில் ராஜாஜி மருத்துவமனையின் அருகில் திறந்துள்ள அம்மன் உணவகம், தற்போது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மிகக் குறைந்த விலையில், இங்கு கிடைக்கும் தரமான உணவுகள், பொது மக்களை கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 30 ரூபாய் இருந்தால் போதும், வயிறார சாப்பிடலாம் எனும் அளவிற்கு இங்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் பலரும், நடிகர் சூரியின் இந்த நெகிழ்ச்சி செயலுக்கு மனதார வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here