படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள்.., கட்டணத்தை தக்கவைக்க நிறுவனங்களுக்கு  அதிகாரம் இல்லை!!!

0
தமிழக மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பலர் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் ஒரு சில ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கட்டணத்தை மட்டும் வாங்கி கொண்டு சரியாக பாடம் நடத்துவதில்லை என புகார்கள் வந்துள்ளது. அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் VLCC என்ற பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்த ஒரு மாணவர் வகுப்புகள் சரியாக நடக்காததால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் அந்த நிறுவனத்திடம் கட்டிய தொகையை திருப்பி கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனர்.

இதனால் கேரள நுகர்வோர் ஆணையத்தில் அந்த மாணவன் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் பயிற்சி கட்டணத்தை வைத்துக் கொள்ள எந்த ஒரு பயிற்சி நிறுவனத்திற்கும் உரிமை இல்லை. எனவே அந்த மாணவனின் கட்டணத்தை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அந்த மாணவனுக்கு ஏற்பட்ட மனவேதனை, கஷ்டத்திற்கு ரூ.60,000 நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மிக்ஜாம் புயலால் இத்தனை கால்நடைகள் உயிரிழப்பு…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here