மிக்ஜாம் புயலால் இத்தனை கால்நடைகள் உயிரிழப்பு…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலாக உருவெடுத்து, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக சென்னையில் தொடர்ந்து நாளையும் (டிசம்பர் 7) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா அவர்கள் சென்னையின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதாவது, “மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நிவாரணப் பணியில் மின்சார வாரியம், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை சார்ந்தோரை ஈடுபடுத்தி வருகின்றோம். நீர் நிலைகளில் நீர் வரத்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என கூறிய இவர், மழை காரணமாக இதுவரை 311 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here