மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

0
Heat
Heat

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Raining
Raining

10ம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகளில் நிறைய பேர் பெயில் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்..!

தென்மேற்கு , மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 23ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here