தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பு – செப்.30 ஆம் தேதி முக்கிய முடிவு!!

0

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவு செப்டம்பர் 30 ஆம் தேதி எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததன் பின்னர் தொடர்ந்து மாநில அரசால் தளர்வுகள் அளிக்கப்பட்டது. பின்னர் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த சிறிது நாட்களிலேயே பள்ளி மாணவர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

 

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கும் மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெளிவுபடுத்தினார். இதனை தொடர்ந்து எட்டாம் வகுப்பு வரையே உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து செப்.30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here