பேரறிஞர் பெருந்தகையின் 113ம் ஆண்டு பிறந்த தினம் – தமிழினத்தின் கொள்கை தீபம் என முதல்வர் புகழாரம்!!

0

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளான இன்று தடைகளை உடைத்து தமிழினம் தலை நிமிர சூளுரைப்போம் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்ணாவின்  113 வது பிறந்தநாள்:

திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில், பெரியாருக்கு அடுத்த திராவிட பிறையாகவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசியல் குருவாகவும், அவரின் அண்ணனாகவும் விளங்கிய இவர் தமிழக மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்த்திருப்பவராய் பார்க்கப்படுகிறார்.

 இந்த நிலையில், அரசியலின் மிகப்பெரிய ஆளுமையாகாவும், உலகின் தலைசிறந்த பேச்சாளர்களில் தலைமை மனிதராக கருதப்படும் இவரின் இறப்பின் போது கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது. தற்போது, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இவரது பிறந்த நாளில், முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பார்க்கப்படும் விதமாக தமிழக முதல்வர் இவர் குறித்து முக்கிய பதிவை டுவிட் செய்துள்ளார்.


அதாவது, பெரியாரின் கொள்கை தடியாகவும், ஆரிய மாயை சுட்டு அளித்த அறிவு தீயாகவும், இந்தித் திணிப்புக்கு எதிராக பாய்ந்த தமிழ் ஈட்டி எனவும் பேரறிஞர் அண்ணாவுக்கு  முதல்வர் முக.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.  தில்லிக்கு திகைப்பூட்டிய திராவிட பேரொளியான பேரறிஞர் பெருந்தகையின் 113 பிறந்த நாளில் தமிழினத்தின் தடைகளை உடைத்தெறிந்து தலை நிமிரச் செய்வோம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here