குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு., இந்த தேதியில் முழு அடைப்பு போராட்டம்., பரபரப்பு சூழலில் அசாம்!!!

0

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான அமைப்பினரும் போராட்டங்களை மேற்கொண்டனர். இதனால் அமலுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பு 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அமைச்சர்கள் உறுதி அளித்து இருந்தனர். அதன்படி நேற்று (மார்ச் 12) முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச் 12) முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். அதேபோல் மாணவர் அமைப்புகள் டார்ச்லைட் பேரணி, சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC “குரூப் 1” தேர்வர்களே., எளிதாக தேர்ச்சி பெற, இது முக்கியம்? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here