உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு உதவி கரம் நீட்டிய வில்லன் பிரபலம் – 10 லட்சத்தை வழங்கி நெகிழ்ச்சி!!

0
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு உதவி கரம் நீட்டிய வில்லன் பிரபலம் - 10 லட்சத்தை வழங்கி நெகிழ்ச்சி!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விமல்ராஜ், கபடி விளையாடிய போது களத்திலேய இறந்த நிலையில், தற்போது அவரின் குடும்பத்துக்காக பிரபல தயாரிப்பாளர் RK சுரேஷ் 10 லட்சம் காசோலை வழங்கி உதவியுள்ளார்.

நீளும் உதவிக்கரம்:

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த மாணாடிக்குப்பம் கிராமத்தில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி  கபடி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், புறங்கனி அணியை சேர்ந்த விமல் ராஜ் என்பவர் கலந்து கொண்டார். தனது அணிக்காக இவர் ரெய்டு சென்றபோது, எதிரணியின் பிடியிலிருந்து தப்ப தாவி குதித்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

மயங்கி சரிந்த இவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விமல் ராஜ்க்கு கண் பார்வையற்ற தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகியோர் உள்ளனர். மொத்த குடும்பமும் இவரை நம்பி இருந்த நிலையில், இவரது இழப்பு அவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது இவருக்காக உதவிக்கரம் தொடர்ந்து நீண்டு வரும் நிலையில், சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் 10 லட்சத்துக்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசு 3 லட்சம், அமைச்சர்கள் சார்பில் 3 லட்சம், அமைச்சர் மெய்யநாதன் நிதியிலிருந்து 2 லட்சம் என வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கபடி அசோசியேசன் சார்பில் 4 லட்சம், கிராமத்தின் சார்பில் 3 லட்சம் என வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here