வாடகை தாய் மூலம் பிரசவித்த பாடகி சின்மயி – கர்ப்பம் குறித்து அவரே தெரிவித்த வைரல் கருத்து!!

0
வாடகை தாய் மூலம் பிரசவித்த பாடகி சின்மயி - கர்ப்பம் குறித்து அவரே தெரிவித்த வைரல் கருத்து!!

சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பாடகி சின்மயி, தான் பிரசவித்த முறை குறித்து தெரிவித்த கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வைரல் கருத்து:

கோலிவுட் சினிமாவின் முன்னணி பாடகியாக வலம் வருபவர் பாடகி சின்மயி. திரைத்துறையில், இதுவரை பல பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில், பாடகி சின்மயி தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக கூறி குழந்தையின் போட்டோக்களை அண்மையில் வெளியிட்டார். இந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு Sharvas என்றும் பெண் குழந்தைக்கு Driptah என்றும் பெயர் வைத்திருப்பதாக பாடகி தெரிவித்தார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருந்த போட்டோவை ஏன் வெளியிடவில்லை என்றும், மேலும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த சின்மயி, தான் கர்ப்பமாக இருந்தது, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றும், எனது சொந்த பாதுகாப்புக்காக அதனை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்த போது கூட ஒரு பஜனை பாடலை பாடி கொண்டிருந்தேன் எனவும் சின்மயி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சின்மயியின் பிரசவம் குறித்து எழுந்த சர்ச்சை கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here