Saturday, April 27, 2024

எல்லையில் இருந்து வெளியேற மறுக்கும் சீனா – லடாக்கில் மீண்டும் பதற்றம்..!!

Must Read

லடாக் எல்லையில் இருந்து சீனா வெளியேறாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு தொடர் பதற்றம் நீடித்து வருகிறது.

போர் பதற்றம்:

காஷ்மீரை அடுத்த லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என கூறி சீன துருப்புகள் ஆக்கிரமிப்பு செய்ததால் இந்திய இராணுவ வீரர்களுக்கும் சீன இராணுவத்திற்கும் இடையே கடந்த மாதம் 15ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது.

ரூ.5,137 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து – 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!!

india china ladakh problem
india china ladakh problem

இதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், இந்திய-சீன இராணுவ கமாண்டர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன படைகள் திருப்பி அனுப்பப்படும் என்று அந்நாட்டு இராணுவம் அறிவித்தது.

அதிர்ச்சி தகவல்:

சீன இராணுவம், லடாக் எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்புகள், நீண்ட தூரம் தாக்கக்கூடிய பீரங்கிகள் மற்றும் 40 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ladakh Border
Ladakh Border

இதனைத்தொடர்ந்து, சீன படைகள் வெளியேறிவிட்டதாக உறுதி அளித்தும் குறிப்பிட்ட சமவெளியிலிருந்து சீன படைகள் முழுமையாக வெளியேறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது இருநாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -