Friday, April 26, 2024

100 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு – புதுவை அரசு அதிரடி நடவடிக்கை..!!

Must Read

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுச்சர் ஊழியர்கள்:

புதுச்சேரி மாநில அரசு பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியராக சுமார் 1300 பேர், கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை தினகூலி ஊழியராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீக்குளிக்க முயற்சி:

நேற்று மதியம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில ஊழியர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தற்கொலைக்கு முயன்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தினர்.

தானா சேர்ந்த ரசிகர் கூட்டம் – பிறந்தநாள் கொண்டாடும் சூர்யா..!!

firing ourselves
firing ourselves

இதனைத்தொடர்ந்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அரை மணி நேரம் கழித்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு:

அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், தொற்று நோயை ஏற்படுத்துதல், கூட்டங்களை அதிகளவு சேர்த்தல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே காவல் துறையினருக்கு அரசு கைது செய்ய உத்தரவளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 ஊழியர்கள் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -