சீனாவின் திட்டமிட்ட தாக்குதல் LACயை கண்டிப்பாக மதிக்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்…!

0
external affairs minister jaishankar
external affairs minister jaishankar

இந்திய – சீன லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

external affairs minister jaishankar
external affairs minister jaishankar

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய சீனா கல்வான் பள்ளத்தின் அருகில் சீனா திட்டமிட்டபடியே தாக்குதல் நடத்தியது என ஹெரிவித்துள்ளார்.கல்வான் பள்ளத்தாக்கில் அடுத்தடுத்து நடைபெற்ற மோதலுக்கு காரணம் சீன ராணுவத்தின் செயல்கள்தான்.இதற்க்கு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் சீன வெளியுறவு அமைச்சர்க்கு கண்டனம் தெரிவித்தார்.நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது சில கற்கள் எரிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.இரு தரப்புக்கும் இடையே ஆயுதங்கள் இல்லாத சண்டை  நடந்துள்ளது. அப்போது இரு தரப்பிலும் நியாயமான முறையில் எல்லை மோதலை தீர்க்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் சீனா திட்டமிட்டு  லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட கூறியுள்ளார்.இந்த தாக்குதல் இருதரப்பு நட்புக்கும் பெரும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீனா தங்கள் தரப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து நிலைமையை சீராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். LAC-யை கண்டிப்பாக மதிக்க வேண்டும். அதை ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை கூடாது. ஜூன் 6-ல் இருநாட்டு மூத்த தளபதிகள் பேச்சில் எட்டிய புரிந்துணர்வை உண்மையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here