சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!!

0

நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது சீனாவில் தென்மேற்கு மாகாணமான யுனானில் உள்ள யங்பி யி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சீனாவில் நிலநடுக்கம்:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து வரும் நிலையில் ஆங்காங்கே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சீனாவில் தென்மேற்கு மாகாணமான யுனானில் உள்ள யங்பி யி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் 5 புள்ளி ரிக்டர் அளவில் 4 முறையும் 6 புள்ளி 4 ரிக்டர் அளவில் ஒரு முறையும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதால் இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 2 பேர் பலியான நிலையில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here