பிறந்தவுடன் குழந்தை இறந்ததாக உறவினரிடம் ஒப்படைப்பு – தகனம் செய்யும் போது கண் விழித்த குழந்தை!!!

0
குழந்தை இறந்ததாக உறவினரிடம் ஒப்படைப்பு - தகனம் செய்யும் போது கண் குழந்தை!!!
குழந்தை இறந்ததாக உறவினரிடம் ஒப்படைப்பு - தகனம் செய்யும் போது கண் குழந்தை!!!

உயிருடன் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினரிடம் ஒப்படைத்த மருத்துவ குழுவினர். தகனம் செய்யும்போது கனிவிழித்த குழந்தை அத்துடன் கை,கால்களையும் அசைத்தது. பின் மருத்தவமணைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகனம் செய்யும்பொது கண் விழித்த குழந்தை…

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த 35 வயதுடையவர் பிளவேந்திரராஜா, இவருக்கு பாத்திமாமேரி என்று 30 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு 8 வயதில் மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. பிளவேந்திரராஜா வேன் டிரைவராக இருந்து வருகிறார். பாத்திமாமேரி 3வது குழந்தைக்காக கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 03 ஆம் தேதி பாத்திமாமேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாத்திமாமேரிக்கு சுகப்பிரசவத்தில் 700 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை பேச்சுமூச்சு இல்லாத நிலையில் இருந்தது சிறிது நேரத்திற்கு பின் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

தகனம் செய்யும்பொது கண் விழித்த குழந்தை...
தகனம் செய்யும்பொது கண் விழித்த குழந்தை…

பின் இறந்த குழந்தையை தகனம் செய்வதற்காக எடுத்து சென்று அடக்கம் செய்யும் நேரத்தில் குழந்தை கண் விழித்து பார்த்துள்ளது அதுமட்டுமில்லாமல் கை, கால்களை குழந்தை அசைத்துள்ளது, உடனடியாக உறவினர்கள் குழந்தையை மீண்டும் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர், மருத்துவர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உரிய மருத்துவ உதவிகளை அளித்து வந்தனர். பின் குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி உதவி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அக்குழந்தை சிகிச்சையா பலனின்றி பரிதாபமாக இறந்தது. மருத்துவர்களின் அஜாக்கிரதியால் இந்தமாரி சம்பவம் நடந்துள்ளது, முறையாக பரிசோதிக்காமலே குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது என்று பிரசவம் பார்த்த நேரம் பணியில் இருந்த மருத்துவர், உதவியாளர், செவிலியருக்கு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here